சிவகங்கை : சிவகங்கை நகரில் 2 நாட்களாக தெருக்களில் சேகரமான குப்பை,வீடுகளில் உள்ள குப்பையை வாங்காததால், துர்நாற்றம் வீசி வருகிறது.
சிவகங்கை நகராட்சி சார்பில் 27 வார்டுகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க 150 க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இது தவிர தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற துப்புரவு ஊழியர்கள் உள்ளனர். 2 நாட்களாக இந்நகரில் வீடுகளில் சேகரமான குப்பைகளை வாங்கவில்லை. மேலும், தெருக்களில் தேங்கிய குப்பைகளையும் அகற்றாமல் விட்டுவிட்டனர். இதனால் மழை காலத்தில் குப்பை கழிவில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
வீடுகளில் மக்கள் வசிக்கவே முடியாத அளவிற்கு குப்பை துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் தினமும் தடையின்றி குப்பைகளை அள்ளிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE