பொது செய்தி

தமிழ்நாடு

டிச., 27ல் லாரி ஸ்டிரைக் கூட்டமைப்பு ஆதரவு

Added : டிச 08, 2020
Share
Advertisement
சேலம் : ''தமிழகத்தில், டிச., 27ல் நடக்க உள்ள ஸ்டிரைக்குக்கு, தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு, ஆதரவு தெரிவிக்கிறது,'' என, அதன் பொதுச் செயலர் சண்முகப்பா கூறினார். சேலத்தில் அவர் கூறியதாவது:தமிழகத்தை விட, கர்நாடகாவில், டீசல் விலையில் லிட்டருக்கு, 2.50 ரூபாய் குறைவு என்பதால், தமிழக வாகனங்கள் அங்கு டீசல் நிரப்புவதால், அரசுக்கு, 1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டு

சேலம் : ''தமிழகத்தில், டிச., 27ல் நடக்க உள்ள ஸ்டிரைக்குக்கு, தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு, ஆதரவு தெரிவிக்கிறது,'' என, அதன் பொதுச் செயலர் சண்முகப்பா கூறினார்.

சேலத்தில் அவர் கூறியதாவது:தமிழகத்தை விட, கர்நாடகாவில், டீசல் விலையில் லிட்டருக்கு, 2.50 ரூபாய் குறைவு என்பதால், தமிழக வாகனங்கள் அங்கு டீசல் நிரப்புவதால், அரசுக்கு, 1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்களை, தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது போல், லாரிகளை தன் வசப்படுத்த விரும்பினால், நாங்கள் ஒப்படைக்க தயாராக உள்ளோம்.இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 27ம் தேதி காலை, 6:00 மணி முதல், நடத்தப்பட உள்ள காலவரையற்ற ஸ்டிரைக்குக்கு, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.

100 சதவீத லாரிகள் நிறுத்தப்படும். இந்த பிரச்னையில் முதல்வர் தலையிட்டு, லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X