பொது செய்தி

தமிழ்நாடு

வக்கீல்களுக்கு தனிநபர் கடன் வழங்க பரிந்துரை

Added : டிச 08, 2020
Share
Advertisement
கோவை:கொரோனா பாதிப்பு காரணமாக, 500 வக்கீல்களுக்கு, தனிநபர் கடன் வழங்க, கோர்ட் வளாகத்திலுள்ள ஐ.ஓ.பி., கிளை முன் வந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக, கடந்த பல மாதங்களாக நீதிமன்றங்களில், முழுமையான விசாரணை நடைபெறவில்லை. இதனால் நலிவடைந்த மற்றும் இளம் வக்கீல்கள் பாதிக்கப்பட்டனர்.இவர்களுக்கு வங்கி கடன் பெற்று தர, கோவை வக்கீல் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. வக்கீல் சங்க

கோவை:கொரோனா பாதிப்பு காரணமாக, 500 வக்கீல்களுக்கு, தனிநபர் கடன் வழங்க, கோர்ட் வளாகத்திலுள்ள ஐ.ஓ.பி., கிளை முன் வந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக, கடந்த பல மாதங்களாக நீதிமன்றங்களில், முழுமையான விசாரணை நடைபெறவில்லை. இதனால் நலிவடைந்த மற்றும் இளம் வக்கீல்கள் பாதிக்கப்பட்டனர்.இவர்களுக்கு வங்கி கடன் பெற்று தர, கோவை வக்கீல் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. வக்கீல் சங்க நிர்வாகிகள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகளை சந்தித்து, வக்கீல்களுக்கு தனிநபர் கடனாக, 25,000 ரூபாய் வழங்குமாறு, பரிந்துரை செய்தனர். இது தொடர்பாக, மாவட்ட நீதிபதியிடம், வங்கி அதிகாரிகள் ஆலோசனை கேட்டனர். அதன்படி, முதல் கட்டமாக, 500 வக்கீல்களுக்கு தனிநபர் கடன் வழங்க, கோர்ட் வளாகத்திலுள்ள ஐ.ஓ.பி., கிளை ஒப்புதல் அளித்தது. கடன் தொகையினை, ஓராண்டு தவணை முறையில், 2,375 ரூபாய் வீதம், மாதம்தோறும் செலுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X