பொது செய்தி

தமிழ்நாடு

நீங்கதான் மூனு மாச சம்பளம் வாங்கித்தரணும் கலெக்டரய்யா!

Added : டிச 08, 2020
Share
Advertisement
கோவை:மூன்று மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை, உடனடியாக பெற்றுத்தர கோரி, மாநகராட்சி கோவை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மாநகராட்சி பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில், 100 இரவு காவலர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக, பணியில் உள்ளனர். நாள் ஒன்றுக்கு, 200 ரூபாய் அடிப்படையில், தொகுப்பூதியம் வழங்கப்பட்டு

கோவை:மூன்று மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை, உடனடியாக பெற்றுத்தர கோரி, மாநகராட்சி கோவை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மாநகராட்சி பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில், 100 இரவு காவலர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக, பணியில் உள்ளனர். நாள் ஒன்றுக்கு, 200 ரூபாய் அடிப்படையில், தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக, தொகுப்பூதியம் வழங்கப்படவில்லை என, கலெக்டரிடம் நேற்று புகார் அளித்தனர்.இதுகுறித்து, சங்க நிர்வாகி மாரிமுத்து கூறுகையில், ''செப்.,அக்.,நவ., ஆகிய மூன்று மாதங்களுக்கான ஊதியம், இதுவரை வழங்கவில்லை. தீபாவளிக்கு பிள்ளைகளுக்கு புது துணிக்கூட எடுக்க முடியாமல் சிரமப்பட்டோம். தற்போது, ஒப்பந்த ஊழியராக நியமித்த தனியார் நிறுவனத்தை கேட்டால், மாநகராட்சியில் இருந்து நிதி வரவில்லை என்கின்றனர்.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், கோப்பு தொலைந்துவிட்டது என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். உயர் அதிகாரிகள் நேரடியாக பார்க்கவே அனுமதிப்பதில்லை. இரண்டு மாதங்களாக அல்லாடி வருகிறோம். இதற்கு, கலெக்டர்தான் தீர்வு காண வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X