கோவை:கோவை மத்திய சிறை உற்பத்தி பிரிவில், காலியாகவுள்ள இடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.மத்திய சிறையின் உற்பத்தி பிரிவில், நான்கு மின்கம்பியாளர், ஒரு பொருத்துநர், நீரேற்று நிலைய பொறுப்பாளர், ஒரு கைமுறை காகித மேற்பார்வையாளர், போதகர், இரண்டு தையல் போதகர், ஒரு நெசவியல் வல்லுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு, தகுதிவாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ளவர்கள், சம்மந்தப்பட்ட கல்வித்தகுதி, ஜாதி சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ்களின் நகல்களுடன், 'சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை, கோவை-18' என்ற முகவரிக்கு வரும், 18ம் தேதிக்குள், அனுப்பிவைக்க வேண்டும். நேர்முக தேர்வின் தேதி, நேர விபரங்கள் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும், அஞ்சல் மூலம் பின்பு தெரிவிக்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE