பொது செய்தி

தமிழ்நாடு

எட்டு மாதத்திற்கு பின் கல்லுாரிகள் துவக்கம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
சிவகங்கை : கொரோனா ஊரடங்கு தளர்வால் 8 மாதத்திற்கு பின் சிவகங்கை மாவட்ட அரசு கல்லுாரிகளில் இளங்கலை 3, முதுகலை 2 ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கின.கொரோனா ஊரடங்கு உத்தரவால், பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை விடப்பட்டன. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால், அரசும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிச.,31 வரை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வில், நேற்று

சிவகங்கை : கொரோனா ஊரடங்கு தளர்வால் 8 மாதத்திற்கு பின் சிவகங்கை மாவட்ட அரசு கல்லுாரிகளில் இளங்கலை 3, முதுகலை 2 ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கின.

கொரோனா ஊரடங்கு உத்தரவால், பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை விடப்பட்டன. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால், அரசும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிச.,31 வரை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வில், நேற்று முதல் அரசு கல்லுாரிகளில் இளங்கலை 3ம் ஆண்டு, முதுகலை 2 ம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் துவங்கின. மாவட்டத்தில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம், மகளிர், காரைக்குடி அழகப்பா, பூலாங்குறிச்சி அரசு கல்லுாரிகள் உட்பட பிற சுயநிதி கல்லுாரிகளில் வகுப்புகள் துவக்கப்பட்டன.

கடந்த 8 மாதத்திற்கு பின் கல்லுாரி திறக்கப்பட்டதால், மாணவர்கள் உற்சாகத்துடன் நேற்று கல்லுாரிக்கு வந்தனர். ஆனால், மாணவர்கள் வருகைக்கு ஏற்ப கிராமப்புறங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் பஸ்களை இயக்காததால், மாணவர்கள் சிரமத்திற்கு இடையே கல்லுாரிக்கு வந்தனர். கல்லுாரிக்கு வந்ததும், நண்பர்களை பார்த்து உற்சாகம் அடைந்தனர். இதனால், கல்லுாரி வளாகமே கலகலப்புடன் காணப்பட்டன.

சமூக இடைவெளி கல்வி:சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் ஜெயந்தி கூறியதாவது, கல்லுாரி கல்வி இயக்குனர் உத்தரவுபடி வகுப்புகள் துவங்கும் முன் மாணவர்களின் உடல் உஷ்ண நிலை பரிசோதனை, முகக்கவசம் அணிந்து வருதல், சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியோடு வகுப்புகளில் அமர செய்து, பாடம் எடுத்து வருகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X