கோவை:பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல சர்வேயர் விஜயகுமார், கன்னியாகுமரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.கோவை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில், நில அளவை பிரிவு செயல்படுகிறது.
நில அளவை செய்து, சான்று வழங்குதல்; லே-அவுட் வரைபட நகல் பெறுதல்; மனையை உட்பிரிவு செய்து, பதிவேடு நகல் பெறுதல் உள்ளிட்ட பணிகளை, இங்கு பெற வேண்டும்.நில அளவைத்துறை யில் இருந்து, பணி மாற்று அடிப்படையில், ஒவ்வொரு மண்டலத்துக்கும் சர்வேயர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதில், கிழக்கு மற்றும் வடக்கு மண்டல நில அளவை பிரிவில், விண்ணப்பதாரர்களிடம் லஞ்சம் கேட்டு, அலைக்கழிப்பதாக, மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகிக்கு புகார் சென்றது.கிழக்கு மண்டல சர்வேயர் விஜயகுமார் மீதான புகார் தொடர்பாக, துறை ரீதியாக விசாரித்தபோது, அத்தகவல் உண்மையானது என தெரியவந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் கவனத்துக்கு, இத்தகவல் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, சர்வேயர் விஜயகுமார், கன்னியாகுமரிக்கு மாற்றப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE