சிவகங்கை : சிவகங்கையில் படைவீரர் கொடி நாள் வசூல் திட்டத்தை கலெக்டர் மதுசூதன் ரெட்டி நிதி அளித்து துவக்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் லதா முன்னிலை வகித்தார். முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குனர் வரதராஜன் வரவேற்றார். கடந்த ஆண்டு (2019) இம்மாவட்டத்தில் கொடி நாள் நிதிவசூலிக்க அரசு நிர்ணயித்த 63 லட்சத்து 48 ஆயிரம் என்ற இலக்கை விட 69 லட்சத்து 56 ஆயிரத்து 962 ரூபாய் சேகரித்துள்ளனர். இந்த ஆண்டு 63 லட்சத்து 48 ஆயிரம் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE