தக்காளி வரத்து அதிகரிப்பு :மார்க்கெட்டில் விலை சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி வரத்து அதிகரிப்பு :மார்க்கெட்டில் விலை சரிவு

Added : டிச 08, 2020
Share
கோவை:கோவை சுற்றுப்பகுதியில், தற்போது தக்காளி செடிகள் காய்ப்புக்கு வந்துள்ளதால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் செடியில் இருந்து தக்காளி பறித்து, மேட்டுப்பாளையம் எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.மழை காரணமாக, செடிகளில் உள்ள தக்காளிகள், பழுப்பு நிறமாக மாறியது. இந்த தக்காளிகளை விவசாயிகள் நேற்று நடந்த ஏலத்திற்கு பறித்து வந்தனர். ஏலத்தில், 14 கிலோ

கோவை:கோவை சுற்றுப்பகுதியில், தற்போது தக்காளி செடிகள் காய்ப்புக்கு வந்துள்ளதால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் செடியில் இருந்து தக்காளி பறித்து, மேட்டுப்பாளையம் எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.மழை காரணமாக, செடிகளில் உள்ள தக்காளிகள், பழுப்பு நிறமாக மாறியது. இந்த தக்காளிகளை விவசாயிகள் நேற்று நடந்த ஏலத்திற்கு பறித்து வந்தனர். ஏலத்தில், 14 கிலோ எடையுடன் கூடிய, 15 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரத்து இருந்தது. தக்காளி பெட்டி ஒன்று அதிகபட்சமாக, 220 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.கடந்த வாரத்தில், தக்காளி பெட்டி ஒன்று அதிகபட்சமாக, 240 ரூபாய்க்கு ஏலம் போனது. மழை காரணமாக தக்காளி பாதிக்கப்பட்டதால், பெட்டி ஒன்றுக்கு 20 ரூபாய் விலை சரிந்துள்ளது.ஏலத்தில் எடுக்கப்படும் தக்காளிகள், காய்கறி கடைகளில் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், மளிகை கடைகளில், 25 ரூபாயும், சூப்பர் மார்க்கெட்களில், 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X