பொது செய்தி

தமிழ்நாடு

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு; விவசாயிகள் ஆலோசனை

Added : டிச 08, 2020
Share
Advertisement
திருப்புவனம் : சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து நீர் பங்கீடு செய்வது பற்றிய ஆலோசனை கூட்டம் உப கோட்ட பொறியாளர் முருகேசன் தலைமையில் நடந்தது.உதவி பொறியாளர்கள் சிங்காரவேலு, அமுதா, சுரேஷ் , விவசாய சங்க பிரதிநிதிகள் ஆதிமூலம், மணல்மேடு ராஜா, பூவந்தி ஆறுமுகம், மடப்புரம் கோபி, கணநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில்

திருப்புவனம் : சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து நீர் பங்கீடு செய்வது பற்றிய ஆலோசனை கூட்டம் உப கோட்ட பொறியாளர் முருகேசன் தலைமையில் நடந்தது.

உதவி பொறியாளர்கள் சிங்காரவேலு, அமுதா, சுரேஷ் , விவசாய சங்க பிரதிநிதிகள் ஆதிமூலம், மணல்மேடு ராஜா, பூவந்தி ஆறுமுகம், மடப்புரம் கோபி, கணநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பொதுப்பணித்துறையினர் கூறுகையில் சிவகங்கை மாவட்டத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று (டிச. 8) மாவட்ட எல்லையான மணலுாருக்கு வந்து விடும், விவசாயிகள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டனர்.

விவசாயிகள் தரப்பில் கூறுகையில்:சிவகங்கை மாவட்டத்திற்கு 449 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, இதனை அதிகரிக்க வேண்டும், கால்வாய்களில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து ஷட்டர்களையும் திறக்க வேண்டும், அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீரை சமமாக பிரித்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X