சிவகங்கை : கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்காக இலவசமாக கொண்டக்கடலை ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. மத்திய அரசு சிவகங்கைக்கு 110 டன் ஒதுக்கியுள்ளது. இலவச கொண்டக்கடலையை ஏ.ஏ.ஒய்., பி.எச்.எச்., கார்டுதாரர்கள் மட்டுமே பெறமுடியும்.
இலவச 5 கிலோ கொண்டக்கடலை: கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசு மார்ச் 24 முதல் தொடர்ந்து டிச.,31 வரை 8 மாதங்கள் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு மத்திய அரசு இலவசமாக கொண்டக்கடலை வழங்குகிறது.ஜூலை முதல் டிச., வரை 5 மாதத்திற்கு வழங்க சிவகங்கை மாவட்டத்திற்கு 110 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கார்டுக்கு மாதம் ஒரு கிலோ வீதம் 5 கிலோ கொண்டக்கடலையை தற்போது இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். முன்னுரிமை குடும்ப அட்டை (பி.எச்.எச்.,) மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா (ஏ.ஏ.ஒய்) குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே இலவசமாக 5 கிலோ கடலை வழங்கப்படும்.
என்.பி.எச்.எச்.,க்கு துவரம் பருப்பு: முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைகளுக்கு (என்.பி.எச்.எச்.,) கொண்டக்கடலை இல்லை. அதற்கு மாறாக ஒரு கிலோ துவரம்பருப்பு இலவசமாக வழங்கப்படும். ரேஷன் கார்டுதாரர்கள் எவ்வித குழப்பமின்றி மத்திய அரசு ஒதுக்கிய 5 கிலோ கொண்டக்கடலையை பெறலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE