பொது செய்தி

தமிழ்நாடு

பனை பொருள் விற்க தனி வாரியம் வேண்டும்

Added : டிச 08, 2020
Share
Advertisement
கோவை,:பனை மற்றும் தென்னை மரங்களை பாதுகாக்கவும், உற்பத்தி பொருட்களை விற்கவும் தனி வாரியம் அமைக்க வேண்டுமென, கோவை நாடார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கோவை வந்துள்ள எம்.பி., கனிமொழியிடம், கோவை நாடார் சங்க பொது செயலாளர் இருதயராஜா கொடுத்துள்ள மனு விவரம்:கோவை நாடார் சங்கத்தில், 22 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். இச்சமுதாயத்தினரில் சிலர், இன்னும் மரம் ஏறும் தொழிலில்

கோவை,:பனை மற்றும் தென்னை மரங்களை பாதுகாக்கவும், உற்பத்தி பொருட்களை விற்கவும் தனி வாரியம் அமைக்க வேண்டுமென, கோவை நாடார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கோவை வந்துள்ள எம்.பி., கனிமொழியிடம், கோவை நாடார் சங்க பொது செயலாளர் இருதயராஜா கொடுத்துள்ள மனு விவரம்:கோவை நாடார் சங்கத்தில், 22 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். இச்சமுதாயத்தினரில் சிலர், இன்னும் மரம் ஏறும் தொழிலில் இருக்கின்றனர். ஆனால், பனை மற்றும் தென்னை மரங்கள் அழிந்து வருகின்றன.பனை மற்றும் தென்னை மரங்களை காக்கவும், உற்பத்தி செய்யும் பொருட்களை விற்கவும் தனி வாரியம் அமைக்க, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொருளாதார வசதியின்றி கஷ்டப்படுவதால், பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கவும், விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாடார் சமுதாயத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, விகிதாச்சார அடிப்படையில், கல்வி மற்றும் இட ஒதுக்கீடு வழங்க வேணடும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X