பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறல் ஆட்டோ மீது என்ன நடவடிக்கை?

Added : டிச 08, 2020
Share
Advertisement
மதுரை : மாநிலம் முழுதும், விதிமீறல் ஆட்டோக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, தமிழக அரசு பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில், ஆட்டோக்களில் விதிகளை மீறி, இருக்கைகளை மாற்றம் செய்கின்றனர். மூன்று பயணியரை மட்டுமே ஆட்டோக்களில் ஏற்றிச் செல்ல வேண்டும். ஆனால், பல ஆட்டோக்களில் விதிகளை

மதுரை : மாநிலம் முழுதும், விதிமீறல் ஆட்டோக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, தமிழக அரசு பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில், ஆட்டோக்களில் விதிகளை மீறி, இருக்கைகளை மாற்றம் செய்கின்றனர். மூன்று பயணியரை மட்டுமே ஆட்டோக்களில் ஏற்றிச் செல்ல வேண்டும். ஆனால், பல ஆட்டோக்களில் விதிகளை மீறி, 12 பேர் வரை ஏற்றுகின்றனர்.இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன.போக்குவரத்து விதிகளை மீறி, அதிக பயணியரை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, போக்குவரத்துத் துறை செயலர், மதுரை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டார். ரத்துநீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பு, 'மதுரையில், 16 ஆயிரத்து, 200 ஆட்டோக்கள் இயங்குகின்றன. விதிகளை மீறிய, 1,065 ஆட்டோக்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன' என தெரிவித்தது.நீதிபதிகள் உத்தரவு:விதிகளை மீறி, ஆட்டோக்களில் அதிகம் பேர் பயணம் செய்து, விபத்து ஏற்பட்டால் இழப்பீடு பெற இயலாது.

, மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. விதிமீறல்களை தடுக்க, பயணியரை பாதுகாக்க அரசிடம் திட்டம் உள்ளதா?மதுரையில் எத்தனை ஆட்டோக்களுக்கு உரிமம் . போலீசார் மற்றும் அரசியல்வாதிகளின் பினாமிகளின் பெயரில், எத்தனை ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.'நோட்டீஸ்'மாநிலம் முழுதும் விதிமீறல் ஆட்டோக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, போக்குவரத்துத் துறை செயலர், கமிஷனர், மதுரை போலீஸ் கமிஷனர் பதிலளிக்க, நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டு, மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X