புதுடில்லி:டில்லியில், புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்ட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.டில்லியில், ஜனாதிபதி மாளிகை அருகே, 971 கோடி ரூபாய் செலவில், முக்கோண வடிவிலான புதிய பார்லி., கட்டடம் கட்டப்பட உள்ளது. வரும், 10ம் தேதி, பிரதமர்
மோடி, புதிய பார்லி., கட்டடத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
ஏற்கனவே, சமூக ஆர்வலர் ராஜீவ் சூரி உள்ளிட்ட சிலர், புதிய கட்டடம் கட்டுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், நில வகையறாவில் செய்யப்பட்ட மாற்றம், ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதால்
![]()
|
மேலும், புதிய பார்லி., கட்டடம் அருகே அனைத்து அமைச்சக அலுவலகங்களை ஒருங்கிணைப்பதால், வாடகை செலவு மிச்சமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில், புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளதாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதை, உச்ச நீதிமன்ற நீதிபதி, ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு, நேற்று, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலான இந்த விசாரணையின் போது, பார்லி., கட்டுமானம் தொடர்பாக, மத்திய அரசின் நிலைப்பாட்டை, ஐந்து நிமிடங்களுக்குள் தெரிவிக்கும்படி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து, துஷார் மேத்தா பேசுகையில், தற்போது, பார்லி., கட்டடத்திற்கு அடிக்கல் மட்டுமே நடப்படுவதாகவும், கட்டட இடிப்பு, புதிய கட்டுமானம், மரங்கள் அழிப்பு போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்றும் உறுதி அளித்தார். இதையடுத்து, அமர்வு பிறப்பித்த உத்தரவு:
புதிய பார்லி., கட்டடம் தொடர்பான முன்னேற்றங்களை பார்த்து, இதை நீதிமன்றம் சுயமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மூல வழக்கில் தீர்ப்பு கூறப்படும் வரை, புதிய கட்டுமானமோ, கட்டட இடிப்போ, மரங்களை அகற்றி வேறிடத்தில் நடும் பணிகளோ நடைபெறாது என, சொலிசிட்டர் ஜெனரல் உறுதி அளித்துள்ளார். அதை, நீதிமன்றம் ஏற்கிறது.
அதனால், அரசு அமைப்புகள், புதிய பார்லி., கட்டுமானம் தொடர்பான ஆவண நடைமுறைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது. வரும், 10ம் தேதி, புதிய பார்லி., கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, திட்டமிட்டபடி நாளை மறுநாள் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற வழி ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE