பொது செய்தி

தமிழ்நாடு

கட்டளைதாரர்கள் பந்தல்களில் சுவாமியை வைக்க கோரிக்கை

Added : டிச 08, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:வைகுண்ட ஏகாதசி விழாவில், கட்டளைதாரர்கள் சமூகப் பந்தல்களில் சுவாமியை வைத்து வழிபட, அனுமதி வழங்க வேண்டும் என, ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.காரமடை அரங்கநாதர் கோவிலில், பகல் பத்து, வைகுண்ட ஏகாதேசி, ராப்பத்து உற்சவம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள், காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட

மேட்டுப்பாளையம்:வைகுண்ட ஏகாதசி விழாவில், கட்டளைதாரர்கள் சமூகப் பந்தல்களில் சுவாமியை வைத்து வழிபட, அனுமதி வழங்க வேண்டும் என, ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.காரமடை அரங்கநாதர் கோவிலில், பகல் பத்து, வைகுண்ட ஏகாதேசி, ராப்பத்து உற்சவம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள், காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதேசி அன்று, நான்கு ரத வீதிகளில் அமைத்துள்ள கட்டளைதாரர்கள் பந்தல்களில், சுவாமியை வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்ற, கோரிக்கையை முன்வைத்தனர்.'மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்ற பின், உற்சவம் நடக்க ஏற்பாடு செய்யப்படும்' என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.காரமடை பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ் குமார் பேசுகையில், ''கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால், விழாவுக்கு வரும் பக்தர்கள் அனைவரும், முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கைகளை சுத்தப்படும் கிருமி நாசினியை வைத்துக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், '' என்றார்.உதவி கமிஷனர் மற்றும் தக்கார் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) கைலாசம் வரவேற்றார். ஸ்தலத்தார் வேத வியாச சுதர்சன பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ரங்காச்சாரி, அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், 30 சமூக பந்தல் கட்டளைதாரர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X