சூபி துறவி குறித்து அவதுாறு வழக்கை ரத்து செய்ய மறுப்பு

Added : டிச 08, 2020
Share
Advertisement
புதுடில்லி, : 'டிவி' விவாத நிகழ்ச்சியில், சூபி துறவி குவாஜா மெய்னுதின் கிஸ்டி குறித்து அவதுாறாக பேசியதாக, நிகழ்ச்சி தொகுப்பாளர் அமிஷ் தேவ்கன் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. விளக்கம் : கடந்த ஜூன் மாதம் நடந்த தனியார், 'டிவி' விவாத நிகழ்ச்சி ஒன்றில், சூபி துறவி, குவாஜா மெய்னுதின் கிஸ்டி

புதுடில்லி, : 'டிவி' விவாத நிகழ்ச்சியில், சூபி துறவி குவாஜா மெய்னுதின் கிஸ்டி குறித்து அவதுாறாக பேசியதாக, நிகழ்ச்சி தொகுப்பாளர் அமிஷ் தேவ்கன் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

விளக்கம் : கடந்த ஜூன் மாதம் நடந்த தனியார், 'டிவி' விவாத நிகழ்ச்சி ஒன்றில், சூபி துறவி, குவாஜா மெய்னுதின் கிஸ்டி குறித்து, நிகழ்ச்சி தொகுப்பாளர் அமிஷ் தேவ்கன், அவதுாறு கருத்து தெரிவித்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் போலீஸ் ஸ்டேஷன்களில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.நிகழ்ச்சி ஒளிபரப்பான அடுத்த நாளே, அது குறித்து, நிகழ்ச்சி தொகுப்பாளர், அமிஷ் தேவ்கன் விளக்கம் அளித்தார்.

அதில், 'முஸ்லிம் ஆட்சியாளர் அலாவுதீன் கில்ஜி என்ற பெயரை குறிப்பிடுவதற்கு பதில், வாய் தவறி, குவாஜா மெய்னுதின் கிஸ்டி பெயரை குறிப்பிட்டுவிட்டேன்' என்றார். இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில், தன் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குகளை ரத்து செய்யுமாறு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியது போலீசின் உரிமை. எனவே, எப்.ஐ.ஆர்., ரத்து செய்யப்பட கூடாது' என, ராஜஸ்தான் அரசு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், மணிஷ் சிங்வி தெரிவித்தார்.

தள்ளுபடி : இதையடுத்து மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. 'அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில், அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப் பட்டுள்ள தடை உத்தரவு தொடரும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.சூபி துறவி, குவாஜா மெய்னுதின் கிஸ்டியின் தர்கா, ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ளது. இங்கு, தினம் தோறும், ஆயிரக்கணக்கானோர் வந்து வழிபடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X