பொது செய்தி

இந்தியா

பயணியருக்கு கட்டண தொகையை திருப்பி வழங்க முடிவு

Added : டிச 08, 2020
Share
Advertisement
புதுடில்லி : ஊரடங்கு கட்டுப்பாடு களால் ரத்தான விமானங்களில், முன்பதிவு செய்திருந்த அனைத்து பயணியருக்கும், அவர்கள் செலுத்திய கட்டண தொகையை, வரும், ஜனவரி, 31ம் தேதிக்குள் திருப்பி வழங்க, 'இண்டிகோ' விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. மீண்டும் துவக்கம் : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச், 23ம் தேதி முதல், அனைத்து வகையான விமான சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டன.

புதுடில்லி : ஊரடங்கு கட்டுப்பாடு களால் ரத்தான விமானங்களில், முன்பதிவு செய்திருந்த அனைத்து பயணியருக்கும், அவர்கள் செலுத்திய கட்டண தொகையை, வரும், ஜனவரி, 31ம் தேதிக்குள் திருப்பி வழங்க, 'இண்டிகோ' விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மீண்டும் துவக்கம் : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச், 23ம் தேதி முதல், அனைத்து வகையான விமான சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, வைரஸ் பரவல் சற்று கட்டுப்படுத்தப்பட்டதும், உள்நாட்டு விமான சேவைகள் மட்டும், மே, 25ம் தேதி முதல், மீண்டும் துவங்கப்பட்டன. அந்த இரண்டு மாதங்களில், திட்டமிடப்பட்டிருந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அதற்கு முன்பதிவு செய்த பயணியர், பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களின் கட்டண தொகை, திருப்பி வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், அப்போது ரத்து செய்யப்பட்ட விமானங்களில், முன்பதிவு செய்திருந்த அனைத்து பயணியருக்கும், கட்டண தொகையை திருப்பி வழங்க, இண்டிகோ விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா நேற்று கூறியதாவது:பணப்புழக்கம்கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மார்ச் மாத இறுதியில், எங்கள் விமான சேவைகள் முற்றிலும் முடங்கின. இதனால், எங்கள் நிறுவனத்தில், பணப்புழக்கம் முற்றிலும் இல்லாமல் போனது. அதன் காரணமாக, ரத்தான விமானங்களில் முன்பதிவு செய்த பயணியருக்கு, கட்டண தொகையை உடனடியாக செலுத்த முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டது.

இப்போது, எங்கள் விமான சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டு உள்ளன. எனவே, அந்த பயணியருக்கு, கட்டண தொகையை திருப்பி வழங்கவேண்டிய கடமை, எங்களுக்கு உள்ளது.அதன்படி, வரும் ஜனவரி, 31ம் தேதிக்குள், அனைத்து பயணியருக்கும், 100 சதவீத கட்டண தொகையை, திருப்பி வழங்க முடிவு செய்துஉள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X