சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரு வார்டு தேர்தலுக்காக ஊழியர்கள் 150 கி.மீ., பயணம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
மூணாறு : கேரளா மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் ஒரு வார்டில் தேர்தல் பணிக்கு செல்லும் ஊழியர்கள் தமிழகம் வழியாக 150 கி.மீ., பயணித்தனர். மூணாறு அருகே இடமலைகுடியில் அடர்ந்த வனத்தில் 26 குடிகளில்(கிராமம்) மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். 2010ல் மாநிலத்தில் முதன் முறையாக மலைவாழ் மக்களுக்கு தனியாக 13 வார்டுகள் கொண்ட இடமலைகுடி ஊராட்சி உருவாக்கப்பட்டது.இங்கு இன்று உள்ளாட்சி

மூணாறு : கேரளா மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் ஒரு வார்டில் தேர்தல் பணிக்கு செல்லும் ஊழியர்கள் தமிழகம் வழியாக 150 கி.மீ., பயணித்தனர்.

மூணாறு அருகே இடமலைகுடியில் அடர்ந்த வனத்தில் 26 குடிகளில்(கிராமம்) மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். 2010ல் மாநிலத்தில் முதன் முறையாக மலைவாழ் மக்களுக்கு தனியாக 13 வார்டுகள் கொண்ட இடமலைகுடி ஊராட்சி உருவாக்கப்பட்டது.இங்கு இன்று உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்காக 65 ஊழியர்கள், 30 போலீசார் நேற்று மூணாறில் இருந்து 12 ஜீப்களில் ராஜமலை, பெட்டிமுடி வழியாக சென்றனர்.6வது வார்டான நுாறடிகுடி தமிழகத்தின் வால்பாறையையொட்டி உள்ளதால் அங்கு நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மூணாறில் இருந்து உடுமலைபேட்டை அருகே ஒன்பதாறு வழியாக வால்பாறைக்கு 150 கி.மீ., துாரம் பயணித்து சென்றனர்.

அங்கு தொலை தொடர்பு வசதி சரிவர இல்லை என்பதால் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் போலீஸ் வயர்லெஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரோடு வசதி சரியாக இல்லாததால் ஓட்டுப்பதிவு முடிந்து மின்னணு இயந்திரங்களுடன் ஊழியர்கள் நாளை மூணாறுக்கு வர உள்ளதாக தேவிகுளம் சப் கலெக்டர் பிரேம்கிருஷ்ணன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X