பொது செய்தி

இந்தியா

உழைத்தால் வெற்றி சாத்தியம்!

Added : டிச 08, 2020
Share
Advertisement
விளம்பர படங்களிலும், சில சினிமா படங்களிலும், பேஷன் ஸ்டைலிஸ்டாக பணியாற்றுவது பற்றி உமா பீம்சிங்: களத்துார் கண்ணம்மா, பாசமலர், பாலும் பழமும் போன்ற படங்களை இயக்கிய, பிரபல இயக்குனர் பீம் சிங் தான் என் மாமனார். அதுபோல, பிரபல குணச்சித்திர நடிகை சுகுமாரி தான் என் மாமியார். மருமகளான என்னை, மகள் போல நடத்தியவர் என் மாமியார். எங்கள்குடும்பத்துடன் ரொம்ப, 'அட்டாச்ட்' ஆக இருப்பார்.

விளம்பர படங்களிலும், சில சினிமா படங்களிலும், பேஷன் ஸ்டைலிஸ்டாக பணியாற்றுவது பற்றி உமா பீம்சிங்: களத்துார் கண்ணம்மா, பாசமலர், பாலும் பழமும் போன்ற படங்களை இயக்கிய, பிரபல இயக்குனர் பீம் சிங் தான் என் மாமனார். அதுபோல, பிரபல குணச்சித்திர நடிகை சுகுமாரி தான் என் மாமியார். மருமகளான என்னை, மகள் போல நடத்தியவர் என் மாமியார். எங்கள்குடும்பத்துடன் ரொம்ப, 'அட்டாச்ட்' ஆக இருப்பார். ஏராள மான படங்களில் நடித்து வந்த அவருக்கு, ஒரு முறை, இருதயத்தில் ஆப்பரேஷன்.தன்னால் பட வேலைகள் நின்று போய் விடக் கூடாது என்பதற்காக, ஆப்பரேஷன் முடிந்த, இரண்டாவது நாளே, ஷூட்டிங் சென்று விட்டார்.

அந்த அளவுக்கு, வேலையில் ஈடுபாடு மிகுந்தவர் அவர். எனக்கு, ௧௯௮௬ல் தான் திருமணம் ஆனது. ஆனால், அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே, என் மாமனார் பீம்சிங் காலமாகி விட்டார்.என் மாமனார் இயக்கிய படங்களில், எனக்கு மிகவும் பிடித்த மானது, பாசமலர். அந்தப் படத்தின், 'வாராயோ தோழி வாராயோ' என்ற பாட்டில், என் மாமியார் சுகுமாரியும் ஆடிஇருப்பார்.சினிமா பாரம்பரியம் மிக்க குடும்பம் என்பதாலும், பெண்கள் அதிகமுள்ள குடும்பத்தில் வளர்ந்த தாலும், அழகா, 'டிரஸ்' பண்ணிக்கிறதில், எனக்கு ஆர்வம் அதிகம். வணிகவியல் துறையில் பட்டப்படிப்பை முடித்தேன். அதன் பின், கோத்தாரி இன்ஸ்டிட்யூட்டில், பேஷன் டிசைனிங் கற்றேன்.

நவீன ஆடைகளை தயாரித்து விற்பனை செய்யும், 'பொட்டிக்' கடையை துவக்கினேன். எனினும், கல்யாணத்திற்கு பின், குடும்ப பொறுப்புகள் அதிகரித்து விட்டதால், பேஷன் டிசைனிங்கில் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தேன். குடும்ப உறுப்பினர்கள் அளித்த உற்சாகத்தில், அதன் பின், பொட்டிக் தொழிலை தொடர்ந்தேன். ஜெமினி, 'டிவி'க்காக, நடிகை ஷோபனாவுக்காக, முதன் முதலில், ஸ்டைலிஸ்ட் ஆக பணியாற்றினேன்.அப்போது ஒரு நாள், எங்கள் பொட்டிக்கிற்கு வந்த நடிகை ஒருவர், ஒரு பாடல் காட்சிக்கு, 'காஸ்ட்யூம் டிசைன்' செய்து தரக் கேட்டார்.அப்படித் தான், சினிமாவில் என் என்ட்ரி துவங்கியது; ௨௫ ஆண்டுகளை கடந்து விட்டேன். ஏராளமான சினிமா, 'டிவி' நிகழ்ச்சிகள், விளம்பரங்களுக்கு, பேஷன் ஸ்டைலிஸ்டாக பணியாற்றி வருகிறேன்.

இப்போது, முன்னணி நடிகையரான அனுஷ்கா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், நித்யா மேனன் போன்ற பலருக்கு, பேஷன் ஸ்டைலிஸ்ட் ஆக உள்ளேன். போட்டி, சவால்கள் நிறைந்த இந்த துறையில், இத்தனை ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்றால், தனித்திறமை வேண்டும். அதனால், கடின உழைப்பு, ஆர்வ மாக பணியாற்றுவதால், வெற்றி பெற்று வருகிறேன்!சொல்கிறார்கள் - அவள் விகடன் - ௮.௧௨.௨௦ பக்: ௬௪

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X