பொது செய்தி

தமிழ்நாடு

'விதை பண்ணை அமைத்தால் அதிக வருமானம் பெறலாம்'

Added : டிச 08, 2020
Share
Advertisement
அன்னுார்:'விதை பண்ணை அமைத்தால், அதிக வருமானம் பெறலாம்' என, விதை ஆய்வு துறை அதிகாரி தெரிவித்தார்.விதை சான்று இணை இயக்குனர் ஆசிர் கனகராஜன், அன்னுார் வட்டார தோட்டங்களிலுள்ள விதை பண்ணைகள் மற்றும் தனியார் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தார். பசூரில், ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட நிலக்கடலை விதைப்பண்ணையை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் அவர் கூறியதாவது:வேளாண் துறை

அன்னுார்:'விதை பண்ணை அமைத்தால், அதிக வருமானம் பெறலாம்' என, விதை ஆய்வு துறை அதிகாரி தெரிவித்தார்.விதை சான்று இணை இயக்குனர் ஆசிர் கனகராஜன், அன்னுார் வட்டார தோட்டங்களிலுள்ள விதை பண்ணைகள் மற்றும் தனியார் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தார். பசூரில், ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட நிலக்கடலை விதைப்பண்ணையை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் அவர் கூறியதாவது:வேளாண் துறை வாயிலாக விதைப்பண்ணை அமைத்தால், கூடுதல் மகசூலும், அதிக வருமானமும் கிடைக்கும். எனவே, விவசாயிகள் விதைப்பண்ணை அமைக்க முன்வர வேண்டும். விதை சான்று களப்பணியாளர்கள், விதையின் குணாதிசயம், பயிர் விலகு துாரம் ஆகியவற்றை பயிற்சி வாயிலாக தெரிவிப்பார்கள்.களைகளை அகற்றி அகற்றி, இனத்துாய்மையை பராமரிக்க வேண்டும். அறுவடைக்கு பின், விதை குவியல்களை நன்கு காய வைத்து, முன் சுத்தம் செய்து, புதிய கோணிப்பைகளில் நிரப்பி, சீல் வைத்து, விதை சான்று துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.தனியார் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்து, ''ஒரு வரிசைக்கு, 250 கிலோவுக்கு மேல் போகாதபடி சேமிக்க வேண்டும்'' என அறிவுறுத்தினார். விதை சான்று உதவி இயக்குனர் வானதி, விதை பகுப்பாய்வு உதவி இயக்குனர் நர்கீஸ், விதை சான்று அலுவலர் நாகசுப்ரமணியம் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X