'ரிபப்ளிக் டிவி' கோரிக்கை : உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

Updated : டிச 08, 2020 | Added : டிச 08, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி : தங்கள் ஊழியர்களை கைது செய்யக் கூடாது என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, 'ரிபப்ளிக் டிவி' தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.டி.ஆர்.பி., எனப்படும் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கை புள்ளிவிபரத்தில் மோசடி செய்ததாக, 'ரிபப்ளிக் டிவி' உள்ளிட்ட ஊடகங்கள் மீது, மஹாராஷ்டிர மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அந்த
'ரிபப்ளிக் டிவி' கோரிக்கை : உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

புதுடில்லி : தங்கள் ஊழியர்களை கைது செய்யக் கூடாது என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, 'ரிபப்ளிக் டிவி' தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
டி.ஆர்.பி., எனப்படும் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கை புள்ளிவிபரத்தில் மோசடி செய்ததாக, 'ரிபப்ளிக் டிவி' உள்ளிட்ட ஊடகங்கள் மீது, மஹாராஷ்டிர மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த வழக்கில், அந்த நிறுவனத்தின், தலைமை செய்தி ஆசிரியர், அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அர்னாப் கோஸ்வாமி மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்கொலைக்கு தூண்டியதாக, மற்றொரு வழக்கில், அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 'ரிபப்ளிக் டிவி' நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:நிறுவனம் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு தரப்பட வேண்டும். வழக்குகள் மூலம், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட, மஹாராஷ்டிர
அரசுக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. 'ஒரே மனுவில் பல கோரிக்கைகளை முன் வைக்கக் கூடாது. மேலும், இந்தக் கோரிக்கைகள் எல்லை மீறியதாக உள்ளன.
'அதனால் விசாரணைக்கு ஏற்க முடியாது' என, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது. இதையடுத்து, மனு திரும்பப் பெறப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P RAMESH KUMAR - balasore,இந்தியா
08-டிச-202017:18:25 IST Report Abuse
P RAMESH KUMAR முதல இவன வெளிய விட்டதே தப்பு மறுபடி இழுத்து உள்ள போடுங்க
Rate this:
Cancel
கொடுக்கு - Ang Mo Kio ,சிங்கப்பூர்
08-டிச-202010:46:32 IST Report Abuse
கொடுக்கு ஹா ஹா ஹா அசிங்கபட்டாண்டா ஆட்டோகாரன்
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-டிச-202008:02:19 IST Report Abuse
VENKATASUBRAMANIAN திமுகவும் சிவசேனாவும் ரௌடியிஸத்தில் ஒன்றே.
Rate this:
08-டிச-202013:50:51 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு நியாயம இருந்தா போராட வேண்டியது தானே என்று அந்த நியாயம் எங்கு போச்சு...
Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
08-டிச-202014:10:16 IST Report Abuse
Kumarபிஜேபி யோக்கிய கட்சி ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X