பொது செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு

Added : டிச 08, 2020
Share
Advertisement
உடுமலை:ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ஸ்கோப்' எனப்படும் பாடக்கருத்து தெளிவுபடுத்துதல் தொடர்பான பயிற்சி வகுப்பு இன்று நடக்கிறது.இத்திட்டத்தின் கீழ், கல்வியியல் ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள், இப்பயிற்சி அளிக்கின்றனர். இதில், அரசு பள்ளிகளில் படிக்கும் மேல்நிலை பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் பயன்பெறும்

உடுமலை:ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ஸ்கோப்' எனப்படும் பாடக்கருத்து தெளிவுபடுத்துதல் தொடர்பான பயிற்சி வகுப்பு இன்று நடக்கிறது.இத்திட்டத்தின் கீழ், கல்வியியல் ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள், இப்பயிற்சி அளிக்கின்றனர். இதில், அரசு பள்ளிகளில் படிக்கும் மேல்நிலை பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு மாவட்டத்தில், பத்து பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.பாடத்தின் பொருளை உணர்ந்து கற்பதற்கும், மாணவர்களின் அறிவாற்றலை, செயல்பாடுகள், களப்பயணங்கள் வழியாக மேம்படுத்துதல், மாணவர்களின் தலைமை பொறுப்பு, பங்கேற்றலை அதிகப்படுத்த வேண்டும்.பாடத்தில் உள்ள கருப்பொருளை, அன்றாட வாழ்வில் தொடர்பு படுத்தி மாணவர்களின் அறிவுத்திறனை வளர்ச்சியடைய செய்தல், புத்தகப்பாடத்தை கடந்து, புதிய சிந்தனை மற்றும் உக்திகளை பயன்படுத்தி ஆர்வத்தை துாண்டுதல் உள்ளிட்டவை இந்த திட்டத்தின் நோக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக, மாவட்ட அளவிலான பயிற்சி, இன்று (8ம் தேதி) திருப்பூரில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படுகிறது. பயிற்சியில் தவறாமல் பங்கேற்க, உடுமலை கல்வி மாவட்டத்தில், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X