உடுமலை:'காலாண்டு வரி, வாகனக்காப்பீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,' என்று லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, லாரிகள் முழு அளவில் இயங்காததால், லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை, சுங்கக்கட்டணம், மூன்றாம் நபர் காப்பீடு தொகை உயர்வு போன்றவை உயர்ந்துள்ளன. அதற்கேற்ப சரக்கு லாரி வாடகைக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.காலாண்டு வரி, வாகன காப்பீடு போன்றவற்றை உடனடியாக செலுத்துமாறு அரசு தெரிவித்துள்ளது.கர்நாடகா, ஒடிசா, இமாசலப்பிரதேசம் போன்ற மாநிலங்களில், காலாண்டு வரி கட்டுவதற்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒளிரும் பட்டை, வேகக்கட்டுப்பாட்டு கருவி போன்றவை பொருத்துவதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.தமிழகத்தில், உடனே, ஒளிரும் பட்டை, வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இவை குறிப்பிட்ட நிறுவனங்களில்தான் பொருத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது.இதை மாற்றி, எந்த நிறுவனத்திலும் பொருத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். காலாண்டு வரி, வாகன காப்பீடு போன்றவற்றுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE