வாஷிங்டன் : அமெரிக்க விஞ்ஞானிகள், 'ஸ்மார்ட்போன் கேமரா' வாயிலாக, கொரோனா பரிசோதனை முடிவை விரைவாக அறிந்து கொள்ளும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர் தற்போதைய கொரோனா பரிசோதனை முறை, சிக்கல் நிறைந்ததாகவும், அதிக நேர தாமதம் ஏற்படுவதாகவும் கருதப்படுகிறது.
இதற்கு மாற்றாக, 30 நிமிடங்களில், கொரோனா பாதிப்பை அறிந்து கொள்வதற்கான வழிமுறையை, அமெரிக்காவின், கிளாட்ஸ்டோன் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இது குறித்து, இம்மையத்தின் மூத்த ஆய்வாளரும், மரபணு ஆய்வுக்கு, இந்தாண்டு நோபல் பரிசு பெற்றவருமான ஜெனிபர் தவுத்னா கூறியதாவது:புதிய பரிசோதனை முறையில், ஒருவரின் மூக்கில் இருந்து எடுக்கப்படும், சளி மாதிரியுடன், 'கேஸ் - 13' என்ற புரதப் பொருளும், அதனுடன், ஒரு பிரத்யேக மூலக்கூறும் சேர்க்கப்படும். இந்த மாதிரி, ஸ்மார்ட்போன் உடன் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தில் வைத்து பரிசோதிக்கப்படும்.
மாதிரியில், கொரோனா வைரஸ் இருந்தால், புரதப் பொருள் பல்கிப் பெருகி, மூலக்கூற்றை துண்டாக்கும். அந்த உரசலில் வெளிப்படும் பிரகாசமான ஒளியை, ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா துல்லியமாக பதிவு செய்து கொள்ளும். இதன் மூலம், 30 நிமிடங்களில், ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதை அறிந்து கொள்ளலாம். பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பது, ஐந்து நிமிடங்களில் தெரிந்து விடும்இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE