உடுமலை:சர்க்கரை ரேஷன் கார்டுகளை, அரிசிக்கார்டாக மாற்றிக்கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.சர்க்கரை பெறும் வகையில் ரேஷன் கார்டு வைத்துள்ள நபர்கள், அரிசி விருப்ப ரேஷன் கார்டுகளாக மாற்றிக்கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுகளை மாற்றிக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தங்கள் ரேஷன் கார்டு நகலுடன், வரும், 20ம் தேதிக்குள், தாலுகா அலுவலகங்களிலுள்ள குடிமைப்பொருள் தாசில்தார் அலுவலகத்திலும், www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் கார்டுகளாக மாற்றப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE