வால்பாறை:வால்பாறை தாய்முடி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு நுழைந்த காட்டுயானைகள், மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையின் முன் பகுதியை இடித்து, அரிசி மற்றும் உணவு பொருட்களை சேதப்படுத்தின.ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில், மருத்துவமனை, குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றை இடித்து சேதப்படுத்தின. மற்றொரு யானைகள் கூட்டம் தோணிமுடி எஸ்டேட் மூன்றாம் பிரிவில், தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும், 'டார்ச்' லைட் அடித்தும் யானைகளை விரட்டினர்.ஒரே நேரத்தில் பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டதால், வனத்துறையினரும், தொழிலாளர்களும் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE