''வேளாண் சட்டங்கள் குறித்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன,'' என, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டம் குறித்து, மத்திய சட்டத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:அமைதியாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில், எதிர்க்கட்சிகள் மூக்கை நுழைத்துள்ளன. எந்த வகையிலாவது, மத்திய அரசை எதிர்க்க வேண்டும்; இதுதான், எதிர்க்கட்சிகளின் நோக்கம். 'ஏற்றுமதிக்கான எல்லா தடைகளையும் நீக்கி, விவசாய உற்பத்தி பொருட்களை வர்த்தக மயமாக மாற்றுவோம்' என, 2019 தேர்தல் அறிக்கையிலேயே காங்கிரஸ் கூறியிருந்தது.
தற்போது, காங்கிரஸ் தலைவர்கள் மாற்றி பேசுகின்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், இந்த சட்டங்களை எதிர்ப்பது தான் ஆச்சரியம். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது, விவசாய சந்தைக்குள், தனியார் நிறுவனங்களையும் அனுமதிக்கும்படி கேட்டு, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், கடிதமே எழுதியவர்.விவசாயிகள் பிரச்னையில், எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE