பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர் வேண்டாம்: பொது மக்களுக்கு விழிப்புணர்வு

Added : டிச 08, 2020
Share
Advertisement
கோத்தகிரி;கோத்தகிரி நகரில் செயல்படும் கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில், குழந்தை தொழிலாளர்கள் குறித்த சோதனை நடந்தது.தொழிலாளர் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் குமார் மற்றும் நாவா 'சைல்டு லைன்' ஒருங்கிணைப்பாளர் மதன்குமார் ஆகியோர் தலைமையில், மூன்று குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோத்தகிரி;கோத்தகிரி நகரில் செயல்படும் கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில், குழந்தை தொழிலாளர்கள் குறித்த சோதனை நடந்தது.தொழிலாளர் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் குமார் மற்றும் நாவா 'சைல்டு லைன்' ஒருங்கிணைப்பாளர் மதன்குமார் ஆகியோர் தலைமையில், மூன்று குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றம் என, கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டது.மேலும், 'கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை,' என்ற வாசகத்தை எழுதி ஒட்ட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.தவிர, 'குழந்தைகளுக்கு இழைக்கப்படும் குற்றங்களான பாலியல் வன்கொடுமை; குழந்தை திருமணம்; பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது; பெண் குழந்தைகளை கேலி செய்தல் மற்றும் அடித்து துன்புறுத்துதல்,' போன்ற குற்றங்கள் நிகழ்ந்தால், 1098 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்அறிவுறுத்தப்பட்டது.மேலும், கடைகளில், விழிப்புணர்வு 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், மேற்பார்வையாளர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X