குன்னுார்:குன்னுாரில் நடந்த தேயிலை ஏலங்களில், 23.07 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 49வது ஏலத்தில்,இலை, டஸ்ட் ரகங்களில், 20.92 லட்சம் கிலோ வந்தது. 18.45 லட்சம் கிலோ விற்றது. 20.16 கோடி ரூபாய் மொத்தவருமானம் கிடைத்தது.மொத்தம், 88.15 சதவீதம் விற்ற நிலையில், சராசரி விலையாக கிலோவுக்கு, 109.25 ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தில், 30 சதவீதம் மட்டுமே விற்பனையாகி, 20 கோடி மதிப்பிலான தேயிலை துாள் தேக்கமடைந்த நிலையில், இந்த முறை குறைந்த விலைக்கு தேயிலை விற்கப்பட்டது. இதனால், சராசரி விலை,21 ரூபாய் குறைந்தது.அதே நேரத்தில், 16 கூட்டுறவு தொழிற்சாலைகளின், 'இன்கோ சர்வ்' ஏலத்தில், சராசரி விலைவீழ்ச்சியடையாமல்இருந்தது. இந்த தொழிற்சாலைகளின் தேயிலை துாள், 133.38 ரூபாய் வரை விற்றது. 7.02 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்த போதும் 2.17 லட்சம் கிலோமட்டுமே விற்பனையாகியது. 2.91 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. இரு ஏலங்களிலும், 23.07 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE