ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், எட்டு மாதங்களுக்கு பின், நேற்று அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டன.கொரோனா காரணமாக, மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும், மார்ச் மாதம் மூடப்பட்டன. செப்., 1 முதல், தோட்டக்கலைக்கு சொந்தமான பூங்காக்கள் திறக்கப்பட்டன.தற்போது, ஊரடங்கு தளர்வு காரணமாக, எட்டு மாதங்களுக்கு பின், ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா, ஷூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம் மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சூழல் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டன. கொட்டும் மழையிலும் திரளான சுற்றுலா பயணிகள் வந்தனர்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 'மாஸ்க்' அணிவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கையை, அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE