கூடலுார்:முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள, வளர்ப்பு யானைகள் உடல் நிலை குறித்து அறியும் வகையில், எடை பரிசோதனை செய்யும் பணி நடந்தது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், 27 வளர்ப்பு யானைகள் உள்ளன. அவற்றின் உடல் எடை அடிப்படையில் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.நேற்று வளர்ப்பு யானைகளை தொரப்பள்ளி அழைத்து சென்று, யானைகள் உடல் எடை பார்க்கும் பணி நடந்தது. வனத்துறையினர் கூறுகையில்,'இங்குள்ள, 27 வளர்ப்பு யானைகளில், 15 யானைகளின் உடல் எடை பார்க்கப்பட்டது. பெரும்பாலான யானைகள் உடல் எடை, 15 கிலோ முதல் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, 'சேரன்' என்ற யானையின் உடல் எடை, 210 கிலோ அதிகரித்துள்ளது. அண்ணா, காமாட்சி, ஜான் ஆகிய யானைகளின் எடை, 20 கிலோ வரை குறைந்துள்ளது. மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால், மற்ற யானைகளுக்கு வேறொரு நாளில் உடல் எடை பரிசோதனை செய்யப்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE