சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த மழவராயநல்லுாரில் மழையால் சாலை துண்டிக்கப்பட்ட இடத்தில் குழாய் அமைத்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.சேத்தியாத்தோப்பு-ஸ்ரீமுஷ்ணம் சாலையில் மழவராயநல்லுாரில் மழையால் சூழ்ந்த தண்ணீரை வெளியேற்ற சாலை துண்டாக்கி வடிகால் அமைக்கப்பட்டது. கானுார், பேரூர் வழியாக ஸ்ரீமுஷ்ணம் செல்லும் போக்குவரத்து தடைப்பட்டு பஸ்கள் அனைத்தும் சோழத்தரம் வழியாக திருப்பி விடப்பட்டது. சாலை துண்டாக்கப்பட்ட இடத்தில் தற்காலிகமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரும்பு தளவாடங்கள் மற்றும் தகர ஷீட் கொண்டு மக்களுக்கு நடைபதை அமைத்தனர்.தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் நெடுஞ்சாலைத்துறை உதவிசெயற்பொறியாளர் பரமேஸ்வரி தலைமையில் ஊழியர்கள் குழாய் அமைத்து சாலை போக்குவரத்தை சீரமைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE