பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் சார்பில், மழையால் பாதித்தவர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.பரங்கிப்பேட்டையில் தொடர் கன மழை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட 2,000 பேருக்கும் அதிகமான மக்களுக்கு, இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் சார்பில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கி, பொது மக்களுக்கு, அன்னதானம் வழங்கினார்.நிர்வாகிகள் அமீது கவுஸ், நிஜாமுதீன், ஹபிபுர் ரகுமான், ஜெய்னு, அஷ்ரப் அலி, ஜின்னா, ஜெய்னுல்லாபுதீன், அனிபா, நுாருல் அமீன், சமது ரஷாதி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE