பொது செய்தி

தமிழ்நாடு

பாரத் பந்த் ஆதரவுக் கோரிதுண்டு பிரசுரம் வழங்கல்

Added : டிச 08, 2020
Share
Advertisement
விருத்தாசலம்; டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நடக்கும் பாரத் பந்த்திற்கு ஆதரவு கோரி, விருத்தாசலத்தில் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தங்களை ரத்து செய்யக் கோரி, டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, நாடு தழுவிய பாரத் பந்த் இன்று

விருத்தாசலம்; டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நடக்கும் பாரத் பந்த்திற்கு ஆதரவு கோரி, விருத்தாசலத்தில் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தங்களை ரத்து செய்யக் கோரி, டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, நாடு தழுவிய பாரத் பந்த் இன்று நடக்கிறது. அதற்கு தி.மு.க., - காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.விருத்தாசலம் நகரில் தி.மு.க., - வி.சி., - கம்யூ., மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இணைந்து, கடைவீதி, ஜங்ஷன் ரோடு, கடலுார் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரிகளை நேரில் சந்தித்து, கடைகளை மூடி, ஒத்துழைக்குமாறு துண்டு பிரசுரம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X