நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம் கோவில்களில் நான்காம் சோமவார பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், சி.என்.பாளையம் மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர், மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரி சமேத ராஜ ராஜேஸ்வரர் கோவில்களில் நேற்று கார்த்திகை மாத நான்காம் சோமவார பூஜை நடந்தது.பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் 3:00 மணிக்கு விநாயகர், ஈஸ்வரர், அம்மன், வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE