கம்மாபுரம்; மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, கம்மாபுரம் அடுத்த தர்மநல்லுாரில், மருத்துவ முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி தலைமை தாங்கினார்.ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி சங்கர், கவுன்சிலர் ராஜவேல், செவிலியர் பரணி பங்கேற்றனர்.முகாமில், கை, கால் நிரந்தரமாக பாதித்தவர்கள், பார்வை இழந்தவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேசாதவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், மூளை முடக்கு வாதத்தால் பாதித்தவர்களுக்கு, மருத்துவர்கள்சங்கீதா, (பிசியோதரப்பி) சசிக்குமார் ஆகியோர் பல்வேறு பரிசோதனை செய்து, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். முன்னதாக வாதத்தால் பாதித்தவர்களுக்கு, செயல் வளர்திறன் பயிற்சியளிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE