பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி

Added : டிச 08, 2020
Share
Advertisement
புவனகிரி; புவனகிரி அருகே ஆலம்பாடி பகுதியில் மழை பாதித்து பள்ளியில் தங்கியுள்ள பொது மக்களுக்கு பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கி எம்.எல்.ஏ., ஆறுதல் கூறினார்.மாவட்டத்தில் கன மழை பெய்து குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. பாதுகாப்பு கருதி பொதுமக்களை பள்ளிக்கூடங்கள், சமுதாயக் கூடங்கள், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்க வைத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் உணவு வழங்கி

புவனகிரி; புவனகிரி அருகே ஆலம்பாடி பகுதியில் மழை பாதித்து பள்ளியில் தங்கியுள்ள பொது மக்களுக்கு பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கி எம்.எல்.ஏ., ஆறுதல் கூறினார்.மாவட்டத்தில் கன மழை பெய்து குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. பாதுகாப்பு கருதி பொதுமக்களை பள்ளிக்கூடங்கள், சமுதாயக் கூடங்கள், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்க வைத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் உணவு வழங்கி வருகிறது.நேற்று ஆலம்பாடி பூதவராயன் பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு. புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார்.ஒன்றிய செயலாளர் மனோகர், துணைச் செயலாளர் வெற்றிவேல், ஊராட்சி தலைவர் காமராஜ், பழனிச்சாமி உட்பட பலர் உடனிருந்தனர். கீரப்பாளையம் ஒன்றியம் கண்ணங்குடி சுற்றுப்பகுதி கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு தயாரிக்கப்படும் உணவு குறித்து சேர்மன் கனிமொழிதேவதாஸ் படையாண்டவர் ஆய்வு செய்தார். பி.டி.ஓ., விமலா, சுப்பிரமணியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X