சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியில் வடிகால் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடியில் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளில் புகுந்ததை கண்டித்து கும்பகோணம் சாலையில் நேற்று காலை 10.40 மணியளவில் அப்பகுதி மக்கள் மறியல் செய்தனர்.டி.எஸ்.பி., சுந்தரம், இன்ஸ்பெக்டர் ராமதாஸ் போலீசாருடன் சென்று மறியல் செய்த மக்களை கலைந்து போக கூறினர். வடிகால் வாய்க்கால் மண் கொட்டி துார்ந்துள்ளதால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளதாக கூறி கலைந்துபோக மறுத்தனர்.இதையடுத்து ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் முகமதுஹசைன், கீரப்பாளையும் பி.டி.ஓ., பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.தாசில்தார் முகமதுஹசைன், பி.டி.ஓ., பாலகிருஷ்ணன் வந்து ஜே.சி.பி., இயந்திரம் மூலம் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வடிய செய்தனர். இதையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE