தமிழ்நாடு

பெண்ணாடம் பகுதியில் 16 ஏரிகள் முழுவதும் நிரம்பியது;.நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Added : டிச 08, 2020
Share
Advertisement
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக புயலுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள், தடுப்பணைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள துறையூர், கோனுார், அரியராவி, காரையூர், தாழநல்லுார், தீவளூர், ஓ.கீரனுார், பெ.பூவனுார், சத்தியவாடி, கார்மாங்குடி உட்பட 16 பொதுப்பணித்துறை ஏரிகள் முழுஅளவு
 பெண்ணாடம் பகுதியில் 16 ஏரிகள் முழுவதும் நிரம்பியது;.நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக புயலுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள், தடுப்பணைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள துறையூர், கோனுார், அரியராவி, காரையூர், தாழநல்லுார், தீவளூர், ஓ.கீரனுார், பெ.பூவனுார், சத்தியவாடி, கார்மாங்குடி உட்பட 16 பொதுப்பணித்துறை ஏரிகள் முழுஅளவு நிரம்பி உள்ளன.இதேபோன்று, தற்போது பெய்து வரும் தொடர் கனமழைக்கு பெலாந்துறை அணைக்கட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் 2361 கனஅடி நீர்வரத்தில், 2003 கனஅடி ஆற்றில் திறந்து விடப்பட்டன.

300 கனஅடி தண்ணீர் பாசன கிளை வாய்க்கால்கள் மூலம் டி.வி.புத்துார், ராஜேந்திரப்பட்டிணம், கொக்கரசம்பேட்டை, ஆனந்தகுடி, குணமங்கலம், திருப்புத்தூர், மேல்புளியங்குடி, வக்கரமாரி, நகரப்பாடி, சேல்விழி, கலியன்குப்பம், ஸ்ரீ நெடுஞ்சேரி, கானுார், கலிங்கனேரி, பாண்டியன் பெரிய ஏரி, பாண்டியன் சித்தேரி, பூவனேரி, பாளையங்கோட்டை ஏரி ஆகிய 18 பாசன ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த ஏரிகள் அனைத்தும் முழு அளவு நிரம்பியதால் 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் போர்வெல் நீர்மட்டம் உயரும் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய விளைநிலங்கள்தொடர் கனமழை காரணமாக பெண்ணாடம் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், ஓடைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோனுார், தாழநல்லுார், தீவளூர், நரசிங்கமங்கலம், இறையூர், அருகேரி, எரப்பாவூர், கொத்தட்டை, பெ.பூவனுார், காரையூர், வெண்கரும்பூர், நந்தப்பாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2000 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் சம்பா நெல் நடவு செய்த வயல், மக்காச்சோளம், உளுந்து, பருத்தி உள்ளிட்ட சாகுபடி செய்த விளைநிலங்கள் தண்ணிரில் மூழ்கின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X