நிவர்', 'புரவி' புயல்களின் போது கல்வராயன்மலையில் பெய்த மழையினால் கோமுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால்,கள்ளக்குறிச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் குளம், தடுப்பணை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.நீர் நிரம்பிய ஏரி, குளங்களைப் பர்வையிடச் செல்லும் இளைஞர்கள் நீர் நிலைகளில் குளித்தும், 'செல்பி' எடுக்கும் போதும் தவறி ஆற்றில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் நீடித்து வருகிறது.கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் மகன் சர்ஜன், 17; என்பவர் கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி எடுத்தவாய்நத்தம் அருகே புறாத்தொட்டி என்ற இடத்தில் முக்தா ஆற்றில் இறங்கி குளித்த போது நீரில் மூழ்கி இறந்தார்.மலைக்கோட்டாலத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன்கவுதம், 19; மணி மகன் தீபக், 18; ஆகிய இருவரும் நவம்பர் மாதம் 23ம் தேதி நண்பர்களுடன் கல்குவாரியில் குளித்த போது நீரில் மூழ்கிஇறந்தனர்.
அதே தினத்தில் இயற்கை உபாதைக்காக மேலப்பழங்கூர் ஏரிக்குச் சென்ற மதிவல்லவன் மகன் கோகுலபிரசாத், 10; தவறி விழுந்துஇறந்தார்.கடந்த 4ம் தேதி கருணாபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் வரதராஜன், 15; குமார் மகன் ராஜ்குமார்,15; ராமு மகன் அஸ்விந்த், 16; ஆகியமூன்று பேரும் கோமுகி ஆற்றின் தடுப்பணையைக் கடந்த போது தவறி ஆற்றில் விழுந்தனர். இதில் ராஜ்குமார் மட்டும் மீட்கப்பட்டார். வரதராஜன் இறந்தார். அஸ்விந்தை இன்னமும் தேடும் பணி தொடர்கிறது.எலவனாசூர்கோட்டை அடுத்த பரியந்தல் கிராமத்தைச் சேர்ந்தமுருகன் மகன் மதன், 11; இயற்கை உபாதைக்காக ஏரிக்குச் சென்ற போது நீரில் மூழ்கி இறந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த 15 நாட்களில் இறந்த 20 வயதுக்குட்பட்ட 5 பேர் நீர்நிலைகளில் மூழ்கி இறந்துள்ளனர்.இதையொட்டிநீர் நிலைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறை சார்பில் ஆங்காங்கே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஊரக வளர்ச்சித் துறை சார்பில்ஒரு சில ஏரிகளில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதையும் பொருட்படுத்தாமல் பெருவங்கூர் ஏரி நிரம்பி, உபரி நீர் செல்லும்இடத்தில் ஒருவர் தங்களது குழந்தைகளை நிற்க வைத்து போட்டோ எடுத்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வந்தபோலீசார் ஒருவர் அவர்களை எச்சரித்து அனுப்பினார்.அதேபோன்று சோமண்டார்குடி கோமுகி ஆற்று தடுப்பணையில் பெண்கள் 'செல்பி'எடுத்து கொண்டிருந்தனர். மக்களின் இந்த அலட்சியப் போக்கினால் விபத்து அபாயம் நீடித்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE