ரிஷிவந்தியம்; சாத்தபுத்துாரில் மழையால் கூரை வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது.ரிஷிவந்தியம் அடுத்த சாத்தபுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி சரஸ்வதி, 40; விவசாய கூலித் தொழிலாளி. அதே பகுதியில் உள்ள விளைநிலத்தில் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.சில தினங்களாக பெய்து வரும் மழையினால், இவரது கூரை வீட்டின் ஒருபகுதி சுவர் நேற்று நள்ளிரவு இடிந்து விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.சங்கராபுரம்சங்கராபுரம் பகுதிகளில் பெய்த மழையால் காட்டுவனஞ்சூர் கிராமத்தில் அய்யாகண்ணுமகன் காசிலிங்கம், அரசம்பட்டு வைத்தி மனைவி பவுனாம்பாள் ஆகியோர் கூரை வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE