புதுச்சேரி: இளைஞர் அமைதி மைய கவிதை போட்டிக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.புதுச்சேரி இளைஞர் அமைதி மைய நிறுவனர் அரிமதி இளம்பரிதி வெளியிட்டுள்ள அறிக்கை:இளைஞர் அமைதி மையம் 2020ம் ஆண்டிற்கான கவிதை போட்டியை 'இலக்கிய ஆளுமை அரிமதி தென்னகனார்' என்ற தலைப்பில் நடத்துகின்றது. கவிதைகள் மரபுக் கவிதையாகவோ அல்லது புதுக்கவிதையாகவோ இருக்கலாம்.போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த அனைவரும் பங்கேற்கலாம். கவிதைகள் இருபது வரிக்குள் எழுதப்பட்டு இருக்க வேண்டும். சிறந்த பத்து கவிஞர்களுக்கு அரிமதி தென்னகனார் இலக்கிய விருதும், பரிசும் வழங்கப்படும்.கவிதைகளை இளைஞர் அமைதி மையம், 72 முதல் குறுக்கு தெரு, ஆனந்தரங்கப் பிள்ளை நகர், புதுச்சேரி 605008 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது arimathiilamparithi@gmail.com என்ற இ-மெயில் வழியாகவோ அனுப்பலாம். கவிதைகளை வரும் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE