பொது செய்தி

தமிழ்நாடு

எலி ஒழிப்பு செயல் விளக்க முகாம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
திண்டிவனம்; திண்டிவனம் அடுத்த கம்பூர் கிராமத்தில் ஒலக்கூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் எலி ஒழிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கான செயல் விளக்க முகாம் நடந்தது.முகாமிற்கு தலைமை தாங்கிய வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனி அன்புமணி பேசுகையில், 'எலிகளால் நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமிப்பு கிடங்குகளில் 30 சதவீதம்

திண்டிவனம்; திண்டிவனம் அடுத்த கம்பூர் கிராமத்தில் ஒலக்கூர் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் எலி ஒழிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கான செயல் விளக்க முகாம் நடந்தது.முகாமிற்கு தலைமை தாங்கிய வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனி அன்புமணி பேசுகையில், 'எலிகளால் நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமிப்பு கிடங்குகளில் 30 சதவீதம் பாதிப்பும் ஏற்படுகிறது. எலிகளின் சிறுநீர், அதன் கழிவுகள், ரோமங்கள் மற்றும் துர்நாற்றம் மூலம் தானியங்கள் அசுத்தம் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.அதனை ஒழிக்க எலிப்பொறிகளை வைத்து எலிகளை உயிருடனும், கொன்றும் கட்டுப்படுத்தலாம். ஆந்தைகள் அமர்வதற்கு வசதியாக குடில் அமைத்தும், எலிகளைக் கட்டுப்படுத்தலாம்' என்றார்.முகாமில், உதவி வேளாண்மை அலுவலர் சுதாகர், ஆத்மா திட்ட அலுவலர்கள் சிட்டிபாபு, நடராஜன் மற்றும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.ஏற்பாடுகளை ஒலக்கூர் வட்டார வேளாண்மை அலுவலர் பிரபு சங்கர் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X