பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

Added : டிச 08, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; உளுந்துார்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 7 பாடப் பிரிவுகளில் 44 காலியிடங்கள் இருப்பதால், வரும் 12ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மனோகரன் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2020ம் ஆண்டு சேர்க்கைக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட மாவட்ட கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட்

கள்ளக்குறிச்சி; உளுந்துார்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 7 பாடப் பிரிவுகளில் 44 காலியிடங்கள் இருப்பதால், வரும் 12ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மனோகரன் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2020ம் ஆண்டு சேர்க்கைக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட மாவட்ட கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி வரை நடந்தது. சேர்க்கையை அதிகரிக்க நவம்பர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் 100 சதவீத காலியிடங்களை பூர்த்தி செய்வதற்காக வரும் 12ம் தேதி வரை மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.உளுந்துார்பேட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் டிராஸ்ட் மேன், பிட்டர், டர்னர், வெல்டர் உட்பட 7 பாடப்பிரிவுகளில் 44 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்கள் உரிய ஒதுக்கீட்டில் நேரடி சேர்க்கை மூலம் நிரப்பப்பட உள்ளதால் 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 12ம் தேதிக்குள் நேரில் அணுகலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X