விழுப்புரம்; 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடைபெற்ற 'சேலை சேலஞ்ச்' போட்டியில் அதிக அளவிலான பெண்கள் ஆர்முடன் பங்கேற்று பரிசு வென்றனர்.'தினமலர்' நாளிதழ், செய்தி சேவையோடு, கல்விச்சேவை, வேலை வாய்ப்பிற்கு வழிகாட்டல் என, மக்கள் நலனுக்கான பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. மேலும், பெண்களிடம் ஒளிந்து கிடக்கும் திறமையை வெளிப்படுத்தவும், கோலமிடும் பாரம்பரிய கலாசாரத்தைப் பாதுகாக்கவும் கோலப்போட்டி நடத்தி பரிசு வழங்குகிறது.இந்நிலையில், வீட்டில் இருந்தபடியே பெண்களின் திறமைக்கு சவால் விடும் வகையில் 'தினமலர்' நாளிதழுடன், விழுப்புரம் தி சென்னை சில்க்ஸ், சூப்பர் ருசி பால் இணைந்து 'சேலை சேலஞ்ச்' எனும் புதுமைப் போட்டியை நடத்தி வருகிறது.நேற்று முன்தினம் 6ம் தேதி 'தினமலர்' நாளிதமிழில் வெளியான கேள்விகள் அடங்கிய கூப்பன் வெளியிடப்பட்டு, போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.'தினமலர்' பரிசுக் கூப்பனில் கேட்கப்பட்ட 10 கேள்விகளுக்கு பதில் எழுதி, கூப்பனை மொபைல் போனில் படம் பிடித்து, கூப்பனில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு 'டெலிகிராம் ஆப்' மூலம், அனுப்பி வைத்தனர்.போட்டியில் பங்கேற்று சரியான பதில் எழுதிய 20 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் வீட்டிற்கே சென்று நேற்று சேலை பரிசாக வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் தி சென்னை சில்க்ஸ் பொது மேலாளர் வீரமணி, மேலாளர்கள் லியாகத் அலி, சதீஷ்குமார் பங்கேற்றனர்.ஆரம்பத்திலேயே பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்திய நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமையும் (13ம் தேதி) போட்டிக்கான கூப்பன் வெளியிடப்படுகிறது. பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு பெற தயாராகுங்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE