பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் மறியலில் ஈடுபட முயற்சி

Added : டிச 08, 2020
Share
Advertisement
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் பாக்கி பணத்தைக் கேட்டு மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 600க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 67 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது. ஒரு சில வியாபாரிகள் கொள்முதல் செய்த விளை பொருட்களுக்கான பணத்தை பல மாதங்களாக செலுத்தாமல் உள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் தினசரி

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் பாக்கி பணத்தைக் கேட்டு மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 600க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 67 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது. ஒரு சில வியாபாரிகள் கொள்முதல் செய்த விளை பொருட்களுக்கான பணத்தை பல மாதங்களாக செலுத்தாமல் உள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் தினசரி கமிட்டியின் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை 11:00 மணியளவில் விவசாயிகள் தங்களுக்கு சேர வேண்டிய பாக்கி தொகையை உடனடியாக வழங்கக் கோரி, கமிட்டி முன்பாக சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பொன்னுரங்கம் ஆகியோர் சமாதானம் பேசி கமிட்டி கண்காணிப்பாளர் வளவன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், வரும் 24ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை முழுதையும் வழங்கி விடுவதாக கமிட்டி நிர்வாகத்தின் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X