பொது செய்தி

தமிழ்நாடு

மழை பாதிப்பு பகுதியில் எம்.எல்.ஏ., ஆய்வு

Added : டிச 08, 2020
Share
Advertisement
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் பகுதியில் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டனர்.உளுந்துார்பேட்டை அடுத்த களத்துார், விஜயங்குப்பம், மணலுார், சேந்தநாடு ஆகிய பகுதிகளில் சில நாட்களாக பெய்த தொடர் மழையால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.திருநாவலுார் பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் பகுதியில் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டனர்.உளுந்துார்பேட்டை அடுத்த களத்துார், விஜயங்குப்பம், மணலுார், சேந்தநாடு ஆகிய பகுதிகளில் சில நாட்களாக பெய்த தொடர் மழையால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.திருநாவலுார் பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., குமரகுரு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண் குராலா ஆகியோர் நேற்று மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது பயிர் சேதங்கள் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது குறித்தும் உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விபரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் செண்பகவேல், வருவாய், வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X