தமிழ்நாடு

கேள்விக்குறி: மணல் கொள்ளையால் நீர் வரத்து...கடைமடை விவசாயிகள் கவலை

Added : டிச 08, 2020
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் சுரண்டப்பட்ட மணல் கொள்ளையால், கடைமடை பகுதி வரை தண்ணீர் வரத்து என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், மாவட்டத்தின் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கர்நாடக மாநிலம், சென்னகேசவா மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு அங்கிருந்து, ஓசூர் வழியாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம்

விழுப்புரம்; விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் சுரண்டப்பட்ட மணல் கொள்ளையால், கடைமடை பகுதி வரை தண்ணீர் வரத்து என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால், மாவட்டத்தின் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கர்நாடக மாநிலம், சென்னகேசவா மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு அங்கிருந்து, ஓசூர் வழியாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 432 கி.மீ., துாரம் பயணித்து, கடலுார் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

ஒசூர் அருகே பாகாளா பகுதியில் தென்பெண்ணையாறு தமிழகத்திற்குள் வருகிறது. இதில், 128வது கி.மீ., துாரத்தில் ஒசூர் அருகே கெலவரப்பள்ளி அணை, 190வது கி.மீ., துாரத்தில் கிருஷ்ணகிரி அணை, 307வது கி.மீ., துாரத்தில் சாத்தனுார் அணை உள்ளது.மேலும், 365வது கி.மீ., துாரத்தில் திருக்கோவிலுார் அணைக்கட்டு, 384வது கி.மீ., துாரத்தில் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு மற்றும் 423வது கி.மீ., துாரத்தில் சொர்ணாவூர் அணைக்கட்டு அமைந்துள்ளது.விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில் 106 கி.மீ., துாரத்திற்குச் செல்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள், சாத்தனுார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.இந்நிலையில், சில ஆண்டுகளாக சாத்தனுார் அணையில் திறக்கப்படும் தண்ணீர் விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கடைமடை பகுதி வரை செல்வது கிடையாது.

இதற்கு, முழு காரணம் தென்பெண்ணை ஆற்றில் நடந்த மணல் கொள்ளையே ஆகும்.தென்பெண்ணை ஆற்றில் திருக்கோவிலுார் அருகே அண்ட்ராயநல்லுார், விழுப்புரம் அருகே கோவிந்தபுரம் ஆகிய பகுதிகளில் அரசு மணல் குவாரி செயல்பட்டது. இந்த குவாரியில் விதிமுறை மீறி பல மீட்டர் ஆழத்திற்கு மணல் சுரண்டப்பட்டது.இதைத் தொடர்பாக எழுந்த புகாரால் கடந்த 2017ம் ஆண்டு அரசு மணல் குவாரி மூடப்பட்டது. அதன் பின்னர், போதிய மழை இல்லாததால் தென்பெண்ணையில் தண்ணீர் வரவில்லை.இந்நிலையில், வடகிழக்கு பருவமழையையொட்டி, பெய்து வரும் பலத்த மழையால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.இந்த தண்ணீர் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு வரை வந்து அங்கிருந்து, தென்பெண்ணை ஆற்றில் 5 கி.மீ., துாரத்தைக்கூட கடக்கவில்லை.எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் இருந்து 10 கி.மீ., துாரம் உள்ள விழுப்புரம் அடுத்த பேரங்கியூர், பிடாகம் பகுதிகளைக் கடந்தால் தான், தளவானுார் புதிய அணைக்கட்டு, சொர்ணாவூர் அணைக்கட்டு மற்றும் கடலுார் மாவட்டத்திற்கு தண்ணீர் செல்லும். ஆனால், மணல் கொள்ளையால் தென்பெண்ணை ஆற்று தண்ணீர் கடைமடை பகுதிக்கு செல்வது கேள்விக்குறியாக உள்ளது.

சாத்தனுார் அணை திறந்தால் கூட தண்ணீர் கடைமடை வரை சென்று சேருமா என்பது கேள்விக்குறிதான்.இதனால், விழுப்புரம் மாவட்டத்தின் தென்பெண்ணை ஆற்று கடைமடை பகுதியில் உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டு, தளவானுார் அணைக்கட்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X