கமுதி : கமுதி, முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக நெல் விவசாயம் நடந்தது. பருவம் தவறியமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
நெற்பயிர்கள் வளர தொடங்கி களைகள் எடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வந்தனர்.இந்நிலையில் தொடர்ந்து மழைபெய்யாததால் நெற்பயிர்கள் கருகியும், தரிசாகவும் மாறிவந்தது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:கமுதி, முதுகுளத்துார் பகுதியில் மானாவாரி பயிராக நெல் விவசாயம் செய்யப்படுகிறது. நடப்பாண்டில் நெல் விவசாயத்திற்கு தேவையாக தண்ணீர் கிடைக்காததால் பல இடங்களில் பயிர்கள் கருகியது. கடந்த சில நாட்களாகவே பருவம் தவறி பெய்த மழையால் நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இருந்தபோதிலும் நெல் விவசாயத்தில் நடப்பாண்டில் போதுமான விளைச்சல் கிடைக்காது.எனவே வரும்காலத்தில்விவசாயிகளின் நலன்கருதி வீணாகிவரும் மழைதண்ணீரை ஊரணி,கண்மாய்களில் தேக்கி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்,என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE