பொன்னேரி,; விவசாய நிலங்களில், மின் கம்பங்கள் விழுந்து, நெற்பயிர்கள் மீது கிடக்கும் மின் கம்பிகளை சீரமைப்பதில், மின் வாரியம் அலட்சியம்காட்டுவதால், விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.மீஞ்சூர் ஒன்றியம், பொதியாரங்குளம் கிராமத்தில், விளை நிலங்கள் வழியாக, மின் கம்பங்கள் பதித்து, விவசாய மின் மோட்டார்கள் மற்றும் 'மொபைல்போன் டவர்' உள்ள அறை ஆகியவற்றிற்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.'நிவர்' புயலால், மேற்கண்ட பகுதியில் இருந்து, மின் கம்பங்கள் சாய்ந்து நெல் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் விழுந்தன.கம்பங்களுக்கு இடையேயான மின் கம்பிகள் நெற்பயிர்களின் மீது படர்ந்தும், தாழ்வாகவும் கிடக்கிறது.இதனால், விவசாயிகள் தங்களது நிலங்களில் களை எடுப்பது, மருந்து தெளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையும் உள்ளது.மேலும், ஏற்கனவே இப்பகுதியில் புதியதாக மின் கம்பங்கள் மாற்றப்பட்டு, பழையவற்றை விவசாய நிலங்களிலேயே போடப்பட்டு உள்ளது.இதனால், அறுவடை காலங்களில் இயந்திரங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.இது தொடர்பாக, தேவம்பட்டு துணை மின் நிலையத்தில் விவசாயிகள் தெரிவித்தும், நடவடிக்கை இன்றி கிடக்கிறது.மேற்கண்ட கிராமத்தின் விவசாய நிலங்களில் விழுந்து கிடக்கும் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE